விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில், பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் பயன்பாடு

Posted On: 25 MAR 2022 5:21PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

தேசியப் புள்ளியில் அமைப்பு (என்எஸ்ஓ) குறிப்பிட்ட இடைவெளியில் நிலவர மதிப்பீடு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகளின் படி, விவசாயம் செய்யும் குடும்பங்களின்  மாத சராசரி வருமானம் ரூ.10,218/- என மதிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பல வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.  இந்த அனைத்துக் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் அதிகளவிலான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, மைக்ரோ நீர்ப்பாசன நிதி போன்ற தொகுப்பு நிதிகள்  உதவுகின்றன.  தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், வேளாண் கட்டமைப்பு நிதி உருவாக்கச் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வேளாண் கட்டமைப்பு நிதி உருவாக்கப்படுகிறது.  பிரதமரின் - கிசான் திட்டம், பிரதமரின் பசல் பீமா திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், காரிப் மற்றும் ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது, தேனீ வளர்ப்பு, ராஷ்ட்ரிய கோகுல் திட்டம், நீலப் புரட்சி, வட்டி தள்ளுபடித் திட்டம், கிசான் கடன் அட்டைத் திட்டம் போன்ற  இதர சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மையில் டிரோன் தொழில்நுட்பம் பின்பற்றப்படுவது, புரட்சியை ஏற்படுத்தும்.

2020-21ம் நிதியாண்டில், வேளாண்துறை பல திட்டங்களை அமல்படுத்துகிறது. இதற்காக ரூ.1,08,622.51 கோடி பயன்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809689

                                                                                **********************

 



(Release ID: 1809849) Visitor Counter : 139


Read this release in: English