ஜல்சக்தி அமைச்சகம்

நிலத்தடி நீர் மாசு நிலவரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் ப்ளூரைடு மற்றும் ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம்

Posted On: 24 MAR 2022 5:12PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு விஸ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

மத்திய  நிலத்தடி நீர் வாரியம், பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம்,  நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரம் குறித்த தரவுகளைச்  சேகரிக்கிறது மற்றும் நிலத்தடி நீரின் தரத்தைக்  கண்காணிக்கிறது.  

இந்த ஆய்வுகள் தண்ணீரில் ப்ளூரைடு மற்றும் ஆர்சனிக்  அளவீடுகளை தெரிவிக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் இதன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உ.ள்ளது. 23 மாநிலங்களைச் சேர்ந்த  370 மாவட்டங்களில், ப்ளூரைடு அளவு  இந்திய தர நிர்ணயம் (பிஎஸ்) அனுமதித்த  அளவை விட அதிகளவு உள்ளது. 21 மாநிலங்களைச் சேர்ந்த 152 மாவட்டங்களில் ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ப்ளூரைடு அளவு லிட்டருக்கு 1.5 மில்லி கிராமை விட அதிகமாக உள்ளது.

அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவள்ளுவர், திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட  லிட்டருக்கு 0.01 மில்லி கிராமைவிட அதிகமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809264

*************



(Release ID: 1809385) Visitor Counter : 200


Read this release in: English