ஜல்சக்தி அமைச்சகம்

நதிகள் இணைப்பு: தமிழக நிலவரம்

Posted On: 24 MAR 2022 5:20PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜல் சக்தித் துறை  இணை அமைச்சர் திரு விஷ்வேஸ்வர் துடு கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

எட்டு இணைப்புகளின் விரிவான திட்ட அறிக்கைகள்  முடிக்கப்பட்டுள்ளன. நதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைப்பதற்கான முன்மொழிவுகளின் விவரங்கள் வருமாறு.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தொடர்புடைய பென்னாறு-காவிரி இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கையும், விரிவான திட்ட அறிக்கையும் நிறைவடைந்துள்ளன.

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி தொடர்புடைய காவிரி, வைகை மற்றும் குண்டாறு இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா தொடர்புடைய நேத்ராவதி மற்றும் ஹேமாவதி இணைப்பிற்கான சாத்தியக்கூறுக்கு முந்தைய அறிக்கை நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா தொடர்புடைய பம்பா, அச்சன்கோவில் மற்றும் வைப்பாறு இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கை நிறைவடைந்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 30 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ 8.44 லட்சம் கோடி ஆகும். இருப்பினும், இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நேரத்தில் இது மாறுபடலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809267

***********(Release ID: 1809376) Visitor Counter : 322


Read this release in: English , Telugu