தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆதரவு: தமிழகத்தில் பதிவு செய்து கொண்டுள்ளோர் எண்ணிக்கை

Posted On: 24 MAR 2022 4:49PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் நல வாரியங்கள் அந்தந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் தொடர்பான கட்டுமானத் தொழிலாளர்களின் தரவுகளைப் பராமரிக்கின்றன.

தொழிலாளர்களின் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவையின் விதிமுறைகள்) சட்டம், 1996-ஐ அரசு இயற்றியுள்ளது.

தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு-2020-ல் இது இப்போது இணைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல், அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்தந்தத்  துறைகளில் செயல்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16,75,896 ஆகும். புதுச்சேரியில் பதிவு பெற்றுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 36,238 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809240

*************



(Release ID: 1809367) Visitor Counter : 262


Read this release in: English