வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நவீன தொழில்நுட்பத்தில் தரமான வீடுகளை விரைந்து கட்ட பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத் துணைத் திட்டம்

Posted On: 24 MAR 2022 3:27PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நவீனத் தொழில்நுட்பத்தில் தரமான வீடுகளை விரைந்து கட்ட பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத் துணைத் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொழில்நுட்பத் துணைத் திட்டம், பலவித பருவநிலை மண்டலங்களில் பேரிடர்களைத் தாக்குபிடிக்கும் வகையில் கட்டிடப் பிளான்கள மற்றும் வடிவமைப்பை உருவாக்க உதவும்.

தொழில்நுட்பthb துணைத் திட்டத்தின் கீழ் (டிஎஸ்எஎம்) கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வீடுகளை விரைவாகவும், நிலையானதாகவும், மாசு ஏற்படுத்தாததாகவும், பேரிடரைத் தாங்கும் வகையிலுமான உலகளாவிய சிறந்த தொழில்நுட்பத்தை அடையாளம் காண உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பம் சவால்-இந்தியா(ஜிஎச்டிசி-இந்தியா) என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலும் இருந்து 54 புதுமையான கட்டிடத் தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் 6 இடங்களில், ஜிஎச்டிசி-இந்தியா திட்டத்தின் கீழ் 6 தனித்துவமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 6 எளிய வீட்டு வசதித் திட்டங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809163

*************



(Release ID: 1809333) Visitor Counter : 179


Read this release in: English