ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய கிராமப்புற குடிநீர் திட்ட இயக்கம்

Posted On: 24 MAR 2022 4:29PM by PIB Chennai

நாட்டில் 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய கிராமப்புற குடிநீர் திட்ட இயக்கத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.

இத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள 3.60 லட்சம் கோடி ரூபாயில் 2.08 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காக அளிக்கப்படவுள்ளது. இதுவரை 19.32 கோடி கிராமப்புற வீடுகளில் 9.24 கோடி வீடுகளுக்கு (48%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809209

***************

 



(Release ID: 1809321) Visitor Counter : 173


Read this release in: English