பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து திட்டம்: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.194 கோடி மத்திய நிதியை செலவு செய்துள்ளது தமிழகம்
Posted On:
23 MAR 2022 4:03PM by PIB Chennai
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 3 ஆண்டுகளில் பல திட்டங்களை அமல்படுத்துகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
போஷான் திட்டம், அங்கன்வாடி சேவைகள் திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம், பெண்களுக்கான உதவி மைய திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சேவை திட்டம், வளர்இளம் பெண்களுக்கான திட்டம், உஜ்வாலா திட்டம், வேலை பார்க்கும் பெண்களுக்கான விடுதி திட்டம் போன்றவை அமல்படுத்துகின்றன.
இந்த திட்டங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் ரூ.194 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் மத்திய நிதியை செலவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808708
**********************
(Release ID: 1808913)
Visitor Counter : 182