பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்இளம் பெண்களுக்கான திட்டம்

प्रविष्टि तिथि: 23 MAR 2022 3:49PM by PIB Chennai

நாடு முழுவதும் 11 வயது முதல் 14 வயது உள்ள பள்ளிக்கு செல்லாத வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கு 600 கலோரி துணை ஊட்டசத்துக்கள், 18 முதல் 20 கிராம் புரதச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆண்டுக்கு 300 நாட்கள் வழங்கப்படுகிறது. 

சமீபத்தில், வளர் இளம் பெண்களுக்கான திட்டம், சக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ்  இணைக்கப்பட்டது.

11 முதல் 14 வயதுடைய பெண்கள், கல்வி உரிமை சட்டம் 2009ன் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் பயனாளிகளாக முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் உள்ள 14 வயது முதல் 18 வயதுள்ள பெண்களும் அடங்குவர்.

வளர் இளம் பெண்களுக்கான திட்டத்துக்கு மாநில வாரியாக வழங்கப்பட்ட தொகை, பயனாளிகளின்

மாநில வாரியான எண்ணிக்கை ஆகியவை  இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 299 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.1.23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808683

                                **********************


(रिलीज़ आईडी: 1808912) आगंतुक पटल : 1688
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati