ஜல்சக்தி அமைச்சகம்
‘H2Ooooh!’ முன்னெடுப்பின் கீழ் இந்திய நதிகளின் பாதுகாப்பு குறித்த 3 அனிமேஷன் படங்கள் வெளியீடு
Posted On:
23 MAR 2022 4:28PM by PIB Chennai
உலக தண்ணீர் தினத்தையொட்டி, தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம், யுனெஸ்கோ மற்றும் பிற பங்குதாரர்கள் இணைந்து “H2Ooooh! – இந்தியாவின் குழந்தைகளுக்கான நீர் திட்டம்” முன்முயற்சியின் கீழ் மூன்று அனிமேஷன் படங்களை வெளியிட்டனர்.
இந்திய நதிகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் இவை ஆகும். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் யுனெஸ்கோவால் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
இது தொடங்கப்பட்டதில் இருந்து, 18 மாநிலங்களில் உள்ள 53 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 31000 மாணவர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வலுவான ஆதரவை பெற்றது.
தொடக்க உரையை ஆற்றிய தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ஜி அசோக் குமார், "தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமித்து பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் தண்ணீரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.
தண்ணீரைப் பாதுகாப்பதற்கான தார்மீகப் பாடங்களுடன் எண்ணற்ற இந்திய புராணங்களில் ஏராளமான கதைகள் உள்ளன, அவற்றிடம் இருந்து உத்வேகம் பெற்று, ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
தண்ணீரை யாராலும் உருவாக்க முடியாது என்றும், அதனால் முடிந்த அளவு தண்ணீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு அவசியம் என்றும் திரு குமார் விளக்கினார். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களின் வரலாற்றுக் குறிப்புகள், குறிப்பாக ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோ ஆகியவை திறமையான வடிகால் அமைப்புகளின் மூலம் நீரை அற்புதமாக நிர்வகிப்பதை எடுத்துக்காட்டுகின்றன. நமது வருங்கால சந்ததியினர் நல்ல மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ, நீர் ஆதாரங்களை பாதுகாப்பது நமது கடமை என்று நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திரு குமார் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வரைந்த அழகிய ஓவியங்கள் மற்றும் படங்களைப் பாராட்டிய அவர், ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வின் மூலம் நீர் பாதுகாப்புச் செய்தியைப் பரப்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808720
**********************
(Release ID: 1808905)
Visitor Counter : 148