சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதை மறுவாழ்வு மையங்கள்: தமிழகம் குறித்த தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2022 4:49PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு நாராயணசாமி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
போதை தேவைக் குறைப்புக்கான தேசியச் செயல்திட்டம் ஒன்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தடுப்புக் கல்வி, விழிப்புணர்வு உருவாக்கம், திறன் வளர்த்தல், திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி மற்றும் போதையில் இருந்து மீண்டவர்களுக்கான வாழ்வாதார ஆதரவு போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.
போதை மறுவாழ்வு மையங்களில் 2018-19-ம் ஆண்டில் 77,479 பேரும், 2019-20-ம் ஆண்டில் 93,364 பேரும், 2020-21-ம் ஆண்டில் 2,08,415 பேரும், 2021-22-ம் ஆண்டில் 2022 மார்ச் 14 வரை 2,72,314 பேரும் சிகிச்சை பெற்றனர்.
போதை தேவைக் குறைப்புக்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 23 திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808231
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1808402)
வருகையாளர் எண்ணிக்கை : 252