சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயிர் காக்கும் மருந்துகளுக்கான விலை கட்டுப்பாட்டு அமைப்பு
Posted On:
22 MAR 2022 4:50PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
வருவாய்த்துறை தெரிவித்த தகவல்படி, குறிப்பிட்ட மருந்தகள் மற்றும் தடுப்பூசிகள் மற்றும் இதர மருந்துகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மற்ற மருந்தகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதன் விவரங்கள் https://egazette.nic.in/WriteReadData/2017/176965.pdf என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும், அத்தியாவசிய மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய மருந்துகள் விலைக் கட்டுப்பாடு உத்தரவை வெளியிட்டது. இதன்படி, தேசிய மருந்து விலை ஆணையம்(என்பிபிஏ) நிர்ணயித்த, அத்தியாவசிய மருந்துகளுக்கான உச்சவரம்பு விலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனால் மருந்து உற்பத்தியாளர்கள் உச்ச வரம்பு விலைக்கு சமமாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ பட்டியலில் உள்ள அத்தியாவசிய மருந்துகளை விற்க வேண்டும். இதன் மூலம் மருந்துகளின் விலையை, என்பிபிஏ கண்காணிக்கிறது. விலைக் கட்டுபாட்டின் கீழ் உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகளின் விவரங்களை என்பிபிஏ இணையளம் www.nppaindia.nic.in -ல் காணலாம்.
************
(Release ID: 1808377)