எரிசக்தி அமைச்சகம்
உஜாலா மற்றும் தேசிய தெருவிளக்குத் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள்
Posted On:
22 MAR 2022 5:14PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
மலிவு விலையில் எல்இடி பல்புகள் வழங்கும் உன்னத ஜோதித் திட்டம் (உஜாலா) கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம் எல்இடி பல்புகளின் விலையைக் குறைத்ததில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. கடந்த 2014ம் ஆண்டில் ரூ.300 முதல் ரூ.350-க்கு விற்கப்பட்ட எல்இடி விளக்குகள் தற்போது ரூ.70 முதல் ரூ.80க்கு விற்கப்படுகின்றன. உஜாலா திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* நாடு முழுவதும் எல்இடி விளக்குகளின் தேவை அதிகரித்தது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு மொத்த ஆர்டர்கள் கிடைத்தன. இது எல்இடி விளக்குகளின் விலைக் குறைப்புக்கு உதவியது.
* மலிவு விலையில் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவித்தது. இதனால் மின் கட்டணம் குறைந்ததோடு, மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டது.
எஇடி பல்புகளின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டதால், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மின்பொருட்களின் சந்தை உருவாகியது.
36.79 கோடி எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு 47, 784 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. அதோடு ஆண்டுக்கு 38.70 மில்லியன் டன்கள் கார்பன் வாயுக்கள் உமிழ்வும் குறைக்கப்பட்டது.
அதேபோல் தேசிய தெருவிளக்குத் திட்டமும் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த தெருவிளக்குகளுக்கு பதில், எல்இடி விளக்குகளை மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் எரிசக்தி செலவு குறைந்து, மின்சாரத் தேவையை சமாளிக்க மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808264
*************
(Release ID: 1808368)
Visitor Counter : 180