சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மனநலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்

Posted On: 22 MAR 2022 4:49PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கழகம்  அளித்த அறிக்கையின்படி நாட்டில் 12 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10.6% பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

நகர்ப்புறங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக கூறியுள்ளது.  3.5% பேர் நரம்பு சம்பந்தமான குறைபாடு உள்ளவர்களாகவும், மனஅழுத்தம் உடையவர்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மனநல  பிரச்சினைகளுக்கு தீர்வு காண 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 5,77,743 அழைப்புகள் வரப்பெற்றுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808230

***************



(Release ID: 1808359) Visitor Counter : 181


Read this release in: English