சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம்: தமிழ்நாட்டில் இறப்புகள் மற்றும் நஷ்ட ஈடு குறித்த விவரங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2022 4:46PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

இயந்திர மயமாக்கப்பட்ட தூய்மை சூழலியலுக்கான தேசியக்  கொள்கை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதார துறை உடனான ஆலோசனைக்குப் பின்னர் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பான துப்புரவு ஆணையத்தை நியமித்தல்.

ஒவ்வொரு நகராட்சியிலும் துப்புரவு எதிர்வினைப்  பிரிவு அமைத்தல்.

இயந்திரமயமாக்கப்பட்ட, சுத்தம் செய்வதற்குத் தேவையான சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் வசதி,

இயந்திரமயமான துப்புரவுத் தொழிலுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளம்,

சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டி அடைப்பு தொடர்பான புகார்களைப் பெற 24x7 உதவி எண், தொழிலாளர்களுக்குப்  பயிற்சி உள்ளிட்டவற்றை இது பரிந்துரைக்கிறது.

2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 7 மரணங்கள் நடந்துள்ள நிலையில் 7 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்  பட்டுள்ளது.

தூய்மை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக 2014-15-ம் ஆண்டு முதல், சலுகைக்  கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1800 பேர் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808227

**********


(வெளியீட்டு அடையாள எண்: 1808354) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: English