சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்ட அமலாக்கம்
Posted On:
22 MAR 2022 4:54PM by PIB Chennai
பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வருடங்களில் வீடுகள் ஒதுக்கீ செய்யப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு நாராயண் சாமி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதன்படி 24 மாநிலங்களில் 18,22,858 பயனாளிகள் கண்டறியப்பட்டதாகவும், அதில் 3,31,053 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார். வீடுகள் ஒதுக்கீட்டிற்காக 1,36,776.50 லட்சம் ரூபாய் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மாநிலங்கள் 50,045.77 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் 35,051 பயனாளிகள் கண்டறியப்பட்டு 657 பேருக்கு வீடுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு 5,042.80 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டதில் அம்மாநிலம் 990.28 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு நாராயண் சாமி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808238
***************
(Release ID: 1808337)
Visitor Counter : 160