பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2022 பிப்ரவரிக்கான மாதந்திர உற்பத்தி அறிக்கை

Posted On: 22 MAR 2022 2:05PM by PIB Chennai

கச்சா எண்ணெய் உற்பத்தி

 

2022 பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2272.26 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது இந்த மாதத்திற்கான இலக்கை விட 5.60% குறைவாகும். மேலும் 2021 பிப்ரவரி மாத உற்பத்தியை விட 2.19% குறைவாகும். 

2021-22 ஏப்ரல் –  பிப்ரவரி காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 27,162.3 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தி இலக்கை விட 4.71% குறைவுஉற்பத்தியை விட 2.57% குறைவு.

 

இயற்கை எரிவாயு உற்பத்தி

 

2022 பிப்ரவரியில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2,602.26 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது 2022 பிப்ரவரி உற்பத்தியை விட 12.79% அதிகமாகும். ஆனால் மாதாந்திர இலக்கை விட 16.19% குறைவாகும்.

2021-22 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 31137.26 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 19.82% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்குடன் ஒப்பிடுகையில் 10.18% குறைவாகும்.

 

சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்

 

2022 பிப்ரவரி மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 20,443.03 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2021 பிப்ரவரியை விட 9.81% அதிகமாகும். ஆனால் இந்த மாதத்திற்கான இலக்கை விட 0.85% குறைவாகும்.

2021-22 ஏப்ரல் – பிப்ரவரி காலத்தில் மொத்தம் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 2,19,366.82 டிஎம்டி-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை விட 9.52% அதிகமாகும்இந்த காலத்திற்கான இலக்கை விட 1.04% அதிகமாகும்.

 

பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி

 

2022 பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 21,151.70 டிஎம்டி ஆக இருந்தது. இது இம்மாதத்திற்கான இலக்கை விட 1.21 சதவீதமும், 2021 பிப்ரவரி உற்பத்தியை விட 8.81 சதவீதமும் அதிகமாகும். 2021-22 ஏப்ரல் – பிப்ரவரி காலத்தில் மொத்த உற்பத்தி 2,30,158 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 9.24 சதவீதம் அதிகமாகும்இந்த காலத்திற்கான இலக்கை விட 1.66 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808113



(Release ID: 1808286) Visitor Counter : 147


Read this release in: English , Hindi