கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபேம் - இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2022 3:26PM by PIB Chennai

ஃபேம் - இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு, வாங்கும் விலையில், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை  மின்கலத்தின் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது மூன்று சக்கரம் அல்லது நான்கு சக்கர மின்சார வாகனத்தின் விலையில் அதிகபட்சம் 20 சதவீதமும், இரண்டு சக்கர மின்சார வாகனத்தின் விலையில், 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையும் ஊக்கத்தொகை 2021 ஜூன் 11 முதல் வழங்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்அளித்த பதிலில் கனரக தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு கிஷன் பால் குர்ஜார் இதனைத் தெரிவித்தார்.

வருவாய்த்துறையிலிருந்து கிடைத்த தகவலின்படி, தற்போது மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் மின்சார வாகன உற்பத்தியில் சேர்ப்பதற்கு 2021 செப்டம்பர் 15 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு  ரூ.25,938 கோடி ஆகும் என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மட்டுமின்றி மின்னேற்றிகள், மின்னேற்றம் நிலையங்களுக்கான ஜிஎஸ்டியும் 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்  திரு கிஷன் பால் குர்ஜார் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806139

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1806202) வருகையாளர் எண்ணிக்கை : 417
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi