ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாசுபட்ட ஆறுகளின் மறுமலர்ச்சி

प्रविष्टि तिथि: 14 MAR 2022 4:30PM by PIB Chennai

ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு. பிஷ்வேஸ்வர் துடு, மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நாட்டில் உள்ள ஆறுகள், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால், மாசுபடுகின்றன.

நாட்டில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து, தேசிய தண்ணீர் தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ்  கண்காணிக்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, நாட்டில் உள்ள 521 ஆறுகளை கண்காணித்ததில் 323 ஆறுகளில் உள்ள   351 பகுதிகள் மாசுபட்டதாக அடையாளம் காணப்பட்டன.   மாநிலம் வாரியாக மாசுபட்ட ஆறுகளின் எண்ணிக்கை, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

நதிகளை சுத்தப்படுத்துவது தொடர்ச்சியான நடைமுறை. ஜல்சக்தி அமைச்சகத்தின், நமாமி கங்கை மற்றும் தேசிய நதி பாதுகாப்பு திட்டம் மூலம் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசுகள் உதவி வருகின்றன.  தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,   16 மாநிலங்களில் உள்ள 34 நதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை  ரூ.5,961 கோடி ஆகும். இங்கு நாள் ஒன்றுக்கு 2777 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நமாமி கங்கை திட்டத்தின் கீழ், மொத்தம் 364 கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக   ரூ.30,853 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், புதுப்பிப்புக்கான அடல் திட்டம், அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றின் கீழும் கழிவு நீர் மற்றும் திட கழிவு மேலாண்மைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.  மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், சிறிய ஆறுகளை புதுப்பிக்க, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805820

                           ***********************

 


(रिलीज़ आईडी: 1805959) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English