ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மையான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
Posted On:
14 MAR 2022 3:01PM by PIB Chennai
நாட்டின் கிராமபப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் தேவையான அளவுக்கு, உரிய தரத்துடன் கூடிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், 10 மார்ச் 2022 நிலவரப்படி, மொத்தம் உள்ள 19.31 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 9.16 கோடி வீடுகள் குழாய் வழிக் குடிநீர் இணைப்பு வசதியைப் பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.
25 ஜூன் 2015-ல் தொடங்கப்பட்ட அம்ருத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 500 மாநகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.42,400 கோடி மதிப்பீட்டில் 1,351 குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில், இதுவரை ரூ.14,049 கோடி மதிப்பிலான 834 திட்டங்கள் முடிக்கப்பட்டிருப்பதாகவும், திரு பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805746
***************
(Release ID: 1805908)
Visitor Counter : 128