பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்கள்: திரு. வைகோ மற்றும் திரு,எம். சண்முகம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரின் பதில்
Posted On:
14 MAR 2022 3:06PM by PIB Chennai
மாநிலங்களவையில் திரு, வைகோ மற்றும் திரு. சண்முகம் ஆகியோருக்கு இன்று பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு. அஜய் பட் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
டிஆர்டிஓ என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு அமைப்பு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகளை பொருத்தவரை, 2019 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை மொத்தம் 249 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை அமைப்புகள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள், போர் விமானங்கள், பாதுகாப்பு வாகனங்கள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், சிறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மின்னணு போர்க்கருவிகள், ராடார்கள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தானியங்கி கருவிகள் உள்ளிட்டவை தொடர்பான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன.
ஆள் இல்லாத வாகனங்கள், பறக்கும் சோதனை படுக்கை, தாக்குதல் ஏவுகணைகள், போர் விமானங்களுக்கான கணினி, பாராசூட்டுக்கள், முன்னேறிய போர் தொழில்நுட்பம், வானொலி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805751
(Release ID: 1805878)
Visitor Counter : 259