சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு தேசிய பாதுகாப்பு விருது
प्रविष्टि तिथि:
10 MAR 2022 12:57PM by PIB Chennai
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு 08.03.2022 அன்று, தேசிய பாதுகாப்பு விருதினை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும், பொது இயக்குநர், தொழிற்சாலை ஆலோசனை மற்றும் தொழிலாளர் நிறுவனமானது (DGFASLI), வழங்கியுள்ளது.
இவ்விருது வழங்கும் விழா புதுடெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இவ்விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்பாக திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் திரு. ராமேஸ்வரர் டெலி, மாண்புமிகு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திரு. பூபேந்தர் யாதவ், மாண்புமிகு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் அமைச்சர் அவர்களிடம் இருந்து விருதினை பெற்று கொண்டார்.
இந்திய அரசானது 1965 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு தேசிய பாதுகாப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதானது 1971-ஆம் ஆண்டு முதல் இந்திய துறைமுகங்களுக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே சரியான பாதுகாப்பு செயல்திறனுக்கான அங்கீகாரமாகவும், விபத்தினை தடுப்பதற்கும் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், நிர்வாகத்தையும், தொழிலாளர்களையும் ஊக்குவிப்பதற்காகவும் இத்தகைய விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமானது துறைமுக செயல்பாடுகளின் போது சரக்கு கையாளும் உபகரணங்களும் ஃ இயந்திரங்களும் சரியான முறையில் பொருத்தப்பட்டிருப்பதையும் அதன் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது. துறைமுக சரக்கு கையாளும் செயல்பாடுகளில் ஈடுபடும் துறைமுக ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்துதல், பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், துறைமுக செயல்பாடு பகுதிகளை ஆய்வு செய்தல், துறைமுகத்தின் சாலைகளில் இரவு நேர செயல்பாடுகளுக்கு தேவையான ஒளி உறுதி செய்தல், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், துறைமுக நடவடிக்கைகளில் தரமான பாதுகாப்பை பேணுவதன் முக்கியத்துவம் குறித்த தகவலை தெரியப்படுத்துதல் போன்ற மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதால் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமானது 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் (ணுநசழ யுஉஉனைநவெ) உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடிய விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூடுதலாக, துறைமுகத்தின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை மேம்பாட்டுகளை முதன்மையாக செயல்படுத்துவதற்கு துறைமுக துணைத்தலைவர், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் அவர்களின் தலைமையில் போக்குவரத்து மேலாளர், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், துறைமுக பாதுகாப்பு ஆய்வாளர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள், சரக்குபெட்டக இயக்குபவர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் அடங்கிய துறைமுக பாதுகாப்பு குழுவானது செயல்பட்டு வருகிறது.
திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் அவர்கள் இந்த விருதுதினை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், உபயோகிப்பாளர்கள், துறைமுக சரக்குபெட்டக முனைய இயக்குபவர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தோடு, இனி வருங்காலங்களில்; ‘விபத்திலா துறைமுகமாக’ இருப்பதோடு மட்டுமல்லாமல் ‘பாதுகாப்பான துறைமுகமாக’ நமது துறைமுகம் திகழ்வதற்கு அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேற்கண்ட தகவலை வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

******
(रिलीज़ आईडी: 1804688)
आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English