சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கு சென்னையில் மார்ச் 12-ல் வேலைவாய்ப்பு முகாம்
Posted On:
09 MAR 2022 3:24PM by PIB Chennai
மத்திய அரசின் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 800 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இந்த முகாமில் 20-க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களும், சென்னையைச் சுற்றியுள்ள நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம், ஐடிஐ, பொறியியல் பட்டம் ஆகிய கல்வித் தகுதி உடைய சென்னையைச் சேர்ந்த ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினர் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை.
வேலைவாய்ப்பு முகாமிற்கு வருவோர் தன் விவர குறிப்புகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் வர வேண்டும்.
இந்த முகாம் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், (சாந்தோம் சர்ச் அருகில்) சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை என்ற முகவரியில், 2022 மார்ச் 12 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணைப் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி திரு.ஜி.கே.ஸ்ரீராக் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 1804363)