சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடியில் வருடாந்திர தொழில் முனைவோர் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்து கொண்டு நாளை உரையாற்றுகிறார்

Posted On: 02 MAR 2022 6:34PM by PIB Chennai

சென்னை ஐஐடி ஆண்டுதோறும் நடத்தும் தொழில்முனைவோர் உச்சிமாநாடு வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு ஆன்லைன் வடிவில் நடைபெறும்.

இதில் நாடு முழுவதிலும் இருந்து 5000 மாணவர்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவோர் கலந்து கொள்வார்கள். மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த 7-வது உச்சிமாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துவார்.

இத்தகவல்களை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்தார்.

 

 

 

****

 

 

 


(Release ID: 1802387) Visitor Counter : 122