சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அஞ்சல் வங்கி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தீவிரம்

Posted On: 01 MAR 2022 4:19PM by PIB Chennai

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள “எங்கும் எப்பொழுதும் அஞ்சல் சேமிப்புகள்” என்ற அறிவிப்பு அஞ்சல் வங்கியை மேலும் மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும் மொத்த வங்கி சேவை வழிமுறையில் உள்ளடக்குவதன் மூலம் கணினி, தொலைபேசி வங்கி சேவை மற்றும் ஏடிஎம் வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை இந்தியாவில் எந்த மூலையிலிருந்தும் எளிதில் மேற்கொள்ளலாம்.

மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் கீழ் உள்ள 4 மண்டலங்களில் சென்னை நகர மண்டலம் தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள கோட்டங்களை உள்ளடக்கி சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.

சென்னை நகர மண்டலத்தில் இயங்கக்கூடிய 2189 அஞ்சல் நிலையங்கள் ஏற்கனவே மொத்த வங்கி சேவையில் இணைக்கப்பட்டு 100 சதவீதத்தை உறுதி செய்துள்ளது. பணப்பரிமாற்ற வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருந்து எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும், வங்கியிலிருந்து அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும்.

சென்னை நகர மண்டலத்தில் உள்ள 2189 அஞ்சல் நிலையங்களில், 1784 அஞ்சல் நிலையங்கள் கிராமப்புரத்திலும், 405 அஞ்சல் நிலையங்கள் நகர்ப்புரத்திலும் செயல்பாட்டில் உள்ளன. அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் துவங்குவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் அடிப்படையில், சென்னை நகர மண்டலம் முழுவதும் சுமார் 67 லட்சம் அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் நடப்பில் உள்ளன.

இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் மட்டும் கிட்டத்தட்ட 4.5 லட்சம் புதிய அஞ்சலக சேமிப்புக் கணக்குள் தொடங்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 7.75 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. சிறப்பான பல சேமிப்புத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திவரும் அஞ்சல் துறையானது இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் மேலும் மக்களை அஞ்சலக சேமிப்புக் கணக்குகளை தொடங்க ஊக்கப்படுத்தும் என சென்னை நகர மண்டலம் அஞ்சல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****


(Release ID: 1802099) Visitor Counter : 185
Read this release in: English