சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சாம்பியனுடன் சந்திப்பு: பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் பங்கேற்பு
Posted On:
24 FEB 2022 5:55PM by PIB Chennai
பிரதமர் அளிக்கும் ஊக்கத்தால் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கிராமப்புற விளையாட்டு வீர்ர்கள் அதிக அளவில் பங்கேற்று, இந்தியா 100 பதக்கங்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக பாராலிம்பிக் வீர்ர் மாரியப்பன்தெரிவித்துள்ளார்.
கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, சாம்பியனை சந்தியுங்கள் என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் திருநரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சாதனையாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இருமுறை பதக்கங்களை வென்று சாதனை படைத்தவரான, சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாரியப்பனுக்கு நூற்றுக்கணக்கான விளையாட்டு வீர்ர்கள் தேசியக் கொடியை அசைத்து பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒலிம்பிக் வீர்ர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தொகுப்பு ஒளிபரப்ப்பட்டது. மேலும், ஆராக்கிய உணவு முறை, விளையாட்டு வீர்ர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள் குறித்த வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. ஆரோக்கிய இந்தியா வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, சரியான பதிலை தெரிவித்த மாணவ-மாணவியருக்கு, பாராலிம்பிக் வீர்ர் மாரியப்பன் பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டி அனுபவம், உணவு பழக்கம், கிராமத்தில் இருந்து ஒலிம்பிக் வரை செல்லும் போது சந்தித்த சவால்கள் குறித்து மாணவ-மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு மாரியப்பன் பதிலளித்தார். பின்னர் மாணவ-மாணவியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், கைப்பந்தும் விளையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபாராலிம்பிக் வீர்ர் மாரியப்பன் கூறியதாவது.
கிராமப் பகுதிகளில் இருந்து அதிக விளையாட்டு வீர்ர்கள் வரவேண்டும் என்பதற்காக பிரதமர் திருநரேந்திரமோடி பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார். பிட்இந்தியா, கேலோ இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீர்ர்களுக்கு அதிக அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்தன. பிரதமர் மேற்கொள்ளும் தொடர் முயற்சியின் காரணமாக, அடுத்தஒலிம்பிக்போட்டியில்இந்தியாகுறைந்தபட்சம் 100 பதக்கங்களையாவது வெல்லும் வாய்ப்புள்ளது.
அடுத்தபடியாக, உலக சாம்பியன் மற்றும் ஆசியப் போட்டிகளுக்காக தயாராகிவருகிறேன். 2 மீட்டர் உயரத்தை தாண்டுவதை இலக்காக வைத்திருக்கிறேன். சேலத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள மைதானம் வரவிருக்கிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வீர்ர்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனது சொந்த விளையாட்டு அகாடெமியை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளேன் என்று மாரியப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
-------
(Release ID: 1800833)
Visitor Counter : 151