அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயர் ஆற்றல் கணினியில் இந்தியா முன்னணியில் உள்ளது
प्रविष्टि तिथि:
22 FEB 2022 6:56PM by PIB Chennai
ஐஐடிகள், ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர் புனே, ஜேஎன்சிஏஎஸ்ஆர் பெங்களூரு, பல்வேறு சி-டாக்-கள், நாபி மொஹாலி போன்ற 10 முதன்மையான நிறுவனங்களில் ஏற்கனவே நிறுவப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புடன் கூடிய தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் (என்எஸ்எம்) மூலம் உயர் சக்தி கம்ப்யூட்டிங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. வேறு பல நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் கூட இதனால் பயன் பெறுகின்றனர்.. மேலும் 5 நிறுவனங்களில் இதன் இறுதிக்கட்ட நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
இது கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், MSMEகள் மற்றும் எண்ணெய் ஆய்வு, வெள்ள முன்னறிவிப்பு, மரபியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் உள்ள ஸ்டார்ட்அப்களின் அதிகரித்து வரும் கணக்கீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் உள்நாட்டு திறனை மேம்படுத்தவும் உதவும்.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (NSM) ஒரு பகுதியாக, இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு, இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றான பரம் பிரவேகாவை நிறுவியுள்ளது. பரம் பிரவேகா, 3.3 பெட்டாஃப்ளாப்களின் சூப்பர் கம்ப்யூட்டிங் சக்தியைக் கொண்டுள்ளது, இது இந்திய கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்ட மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும்.
அடுத்த தலைமுறை உயர்-செயல்திறன் கம்ப்யூட்டிங் (HPC) அமைப்புகளுக்கான உள்நாட்டு சேவையக முனைகள், இன்டர்கனெக்ட் ஸ்விட்ச், ஸ்டோரேஜ் மற்றும் சிஸ்டம் சாஃப்ட்வேர் ஸ்டேக் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு 85% உள்நாட்டு உற்பத்தியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சர்வர் தளமான ‘ருத்ரா’ அடங்கும், இது அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர்வேக கணிணித் தேவைகள் மற்றும் நாட்டின் முக்கிய யுக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
தவிர, "திரிநேத்ரா" எனப்படும் அடுத்த தலைமுறை உள்நாட்டு ஹெச்பிசி இன்டர்கனெக்ட், கம்ப்யூட் நோட்களுக்கு இடையே திறமையான இன்டர்-நோட் தொடர்புக்காக நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தவும், பெரிய அளவிலான அமைப்புகளை ஆதரிக்கவும் உதவும்
தேசிய அறிவு கட்டப்படிப்பை (NKN) முதுகெலும்பாகக் கொண்டு, அவற்றை ஒரு சூப்பர் கம்ப்யூட்டிங் திறனை உருவாக்குவதன் மூலம், நாட்டில் ஆராய்ச்சி திறன்கள் மற்றும் திறன்களை மேம்படுத்த தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சூப்பர் கம்ப்யூட்டிங் வசதிகளின் திராணி வழங்குகிறது . இதன் ஒரு பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, மேலும் ஒரு பகுதி உள்நாட்டில் கட்டப்பட்டது, பிந்தையது காலப்போக்கில் அதிகரிக்கப்படுகிறது. இந்தப் பணியானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆகியவற்றால் கூட்டாக வழிநடத்தப்பட்டு, புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் இந்திய நிறுவனம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிறது.
உள்நாட்டிலேயே இணைத்துச் செய்யப்பட்ட முதல் சூப்பர் கம்ப்யூட்டர் பரம் ஷிவாய், ஐஐடியில் (பிஹூ) நிறுவப்பட்டது, அதைத் தொடர்ந்து பரம் சக்தி, பரம் பிரம்மா, பரம் யுக்தி, பரம் சங்கனக் ஆகியவை முறையே ஐஐடி-காரக்பூர் ஐஐஎஸ்இஆர், புனே, ஜேஎன்சிஏஎஸ்ஆர், பெங்களூரு மற்றும் ஐஐடி கான்பூர், ஐஐடி ஹைதராபாத், நாபி மொஹாலியில் நிறுவப்பட்டுள்ளன..
சூப்பர் கம்ப்யூட்டிங்கில் தலைமைத்துவ நிலையை நோக்கிய இந்தியாவின் அணிவகுப்புவளர்ச்சி HPC மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டுள்ளது . 200 AI PF செயற்கை நுண்ணறிவு சூப்பர்கம்ப்யூட்டிங் சிஸ்டம் உருவாக்கி, C-DAC இல் நிறுவப்பட்டிருப்பது நம்பமுடியாத அளவிற்கு பெரிய அளவிலான AI பணிச்சுமைகளைக் கையாளும் AI தொடர்பான கணினியின் வேகத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. பரம் சித்தி - AI, உயர் செயல்திறன் கணினி-செயற்கை நுண்ணறிவு (HPC-AI) சூப்பர் கம்ப்யூட்டர், நவம்பர் 16, 2020 அன்று தொடங்கப்பட்ட உலகின் முதல் 500 சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர், இத்தகைய அமைப்புகளில் 62 வது இடத்தைப் பிடித்துள்ளது.
11,000 க்கும் மேற்பட்டஅடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர் நிபுணர்களையும் HPC விழிப்புணர்வு கொண்ட நிபுணர்களையும் ஆசிரியர்களையும் பயிற்சி அளித்ததன் மூலம் இது உருவாக்கியுள்ளது. ஹெச்பிசி பயிற்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, ஐஐடி காரக்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கோவா மற்றும் ஐஐடி பாலக்காடு ஆகியவற்றில் ஹெச்பிசி மற்றும் ஏஐ பயிற்சிக்கான நான்கு என்எஸ்எம் நோடல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் HPC, AI மற்றும் பிற பகுதிகளில் ஆன்லைன் பயிற்சி திட்டங்களையும் நடத்தியுள்ளன.
வரும் ஆண்டில், ஐஐடி பம்பாய், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாட்னா, ஐஐடி டெல்லி, ஐயுஏசி டெல்லி, சிடிஏசி-புனே, எஸ்என்பிஎன்சிபிஎஸ், என்சிஆர்ஏ புனே மற்றும் என்ஐசி டெல்லி போன்ற நிறுவனங்களில் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்படும்.
NSM ஆல் இயக்கப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களின் கட்டமைப்பு , தொழில்துறையுடன் இணைந்து, இந்தியாவில் மென்மேலும் உதிரிபாகங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் வழங்குவதுடன் உற்பத்தி திறனை மேம்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை 85% ஆக உயர்த்துகிறது.
இந்த பணியானது 100 பல நிறுவனங்களுக்கு உயர்-செயல்திறன் கம்ப்யூட்டிங் (HPC) வசதிகளை எளிதில் கிஅடைக்கச் எய்யும். மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளுக்கான முதுகெலும்பான Nation Knowledge Network (NKN) மூலம் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரும் பயன் பெறுவர்.
*********************
(रिलीज़ आईडी: 1800410)
आगंतुक पटल : 579