மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கு

Posted On: 22 FEB 2022 5:14PM by PIB Chennai

கல்வித்துறையில் மத்திய பட்ஜெட் 2022 அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சகம் பிப்ரவரி 21-ந் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

தொலைதூரங்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வியை கொண்டு சேர்க்க ஒரு வகுப்பு- ஒரு சேனல் திட்டத்தை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

இது குறித்த அமர்வு, புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வரராவ் தலைமையில் நடைபெற்றது.  தாய்மொழியில்  மின்னணு அம்சங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 2020-ம் ஆண்டு பிரதமரின் இ-வித்யா திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் முன்முயற்சி அனைத்து 12 வகுப்புகளுக்கும் 2020 செப்டம்பர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது.

  பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் அரசு மற்றும் அரசு அல்லாத அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கின் கடைசி அமர்வுக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தலைமை வகித்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800306

***************(Release ID: 1800347) Visitor Counter : 175


Read this release in: Telugu , English , Hindi