நிதி அமைச்சகம்

அரசு பத்திரங்களின் ஏல விற்பனை அறிவிப்பு

Posted On: 21 FEB 2022 6:01PM by PIB Chennai

2028-ம் ஆண்டு இந்திய அரசின் மிதக்கும் விகித பத்திரத்தை ரூ 4,000 கோடிக்கும், 6.54 சதவீத 2032-ம் ஆண்டு அரசு பங்கை ரூ 13,000 கோடிக்கும், 2061-ம் ஆண்டு அரசு பங்கில் 6.95 சதவீதத்தை ரூ 6,000 கோடிக்கும், ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஏலங்கள் மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியால் 2022 பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்படும். அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை, தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டியில்லா ஏல முறை திட்டப்படி ஒதுக்கீடு செய்யப்படும்.

போட்டி மற்றும் போட்டியற்ற ஏலங்களை ரிசர்வ் வங்கியின் இ-குபேர் அமைப்பில் மின்னணு முறையில் 2022 பிப்ரவரி 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

போட்டியில்லா ஏலங்கள் காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணிக்குள்ளும், போட்டியுடன் கூடிய ஏலங்கள் காலை 10.30 முதல் காலை 11.30 மணிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏலங்களின் முடிவுகள் 2022 பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை 2022 பிப்ரவரி 28-ம் தேதி செலுத்த வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800080

                                                                                                ******************



(Release ID: 1800146) Visitor Counter : 116


Read this release in: Hindi , Punjabi , Urdu , English