சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஹைட்ரஜன் இருப்புக்கான நவீன பொருட்கள் உற்பத்திக்கு காரைக்குடி சிஎஸ்ஐஆர் – சிக்ரியில் ஆராய்ச்சி ஆதரவு திட்டத்தை ஒஹ்மியம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
16 FEB 2022 5:41PM by PIB Chennai
வடிவமைப்பு, உற்பத்தி, பிஇஎம் எலக்ட்ரோலைசர் பொருத்துதலில் தனித்துவ நிறுவனமான பெங்களூருவைச் சேர்ந்த ஒஹ்மியம் இன்டர்நேஷனல் மற்றும் உலகின் முன்னணி மின் வேதியியல் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் (சிக்ரி) ஆகியவை செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கரியமில வாயு இல்லாத ஹைட்ரஜனை தயாரிப்பதற்கான புதிய பொருள்களை உருவாக்க சிஎஸ்ஐஆர் – சிக்ரிக்கு ஒஹ்மியம் நிதியுதவி அளிக்கும். 3 ஆண்டு கால திட்டம் பிப்ரவரி 4, 2022 அன்று தொடங்கப்பட்டது.
இது குறித்து ஒஹ்மியம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் சொக் கருப்பையா கூறுகையில், இந்த நிதியுதவி சிக்ரியின் ஆழ்ந்த அனுபவத்தையும், வளங்களையும் அதிகரிக்க உதவும் என்றும் இரு நிறுவனங்களின் தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் திட்டங்களுக்கு இது பயன் தரும் என்றும் தெரிவித்தார்.
“ஒஹ்மியம் போன்ற தொழில்நுட்ப தலைமையுடன் பணியாற்ற நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என்று சிஎஸ்ஐஆர் – சிக்ரி இயக்குனர் டாக்டர் கலைசெல்வி தெரிவித்தார்.
கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத உலகம் என்ற இலக்கை எட்டுவதற்கு பசுமை ஹைட்ரஜனுக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. சிஎஸ்ஐஆர் – சிக்ரி-யுடன் ஒஹ்மியம் நிறுவனத்தின் ஒத்துழைப்பு குறைந்த செலவிலான பசுமை ஹைட்ரஜனை உறுதி செய்ய உதவும் என்பது மட்டுமின்றி இதன் பல்வேறு வடிவங்கள் உலகின் தேவையை எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கும்.
****
(रिलीज़ आईडी: 1798798)
आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English