சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம், சுயசார்பு பாரதம் திட்டத்துக்கு வேளாண் ஏற்றுமதி ஆதரவு
प्रविष्टि तिथि:
13 FEB 2022 7:40PM by PIB Chennai
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) சார்பில் நிறுவனநாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும், திறன் வளர்ச்சித்திட்டம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்கள் உடனான சந்திப்பு நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடந்தது.
சென்னையில் உள்ள வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) மண்டல அலுவலகம் சார்பில் காஞ்சிபுரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய சென்னை மண்டல தலைவர் டாக்டர். அங்கமுத்து, 1986 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பில் தொடங்கப்பட்ட அபேடாவின் ஏற்றுமதி, 2020 – 21 இல் கிட்டத்தட்ட 20.67 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது அபேடா 205 நாடுகள் வரை, பல வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மதிப்பு மேலும், 23.7 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
2020- 21 இல் ஒட்டுமொத்த விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் அபேடாவின் பங்கு 49 % ஆகும். இதில் 59 % தானியங்கள் மற்றும் தோட்டக்கலை பொருட்கள் மூலமும், 23 % மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மூலம் 23 சதவீதமும், 18 சதவீதம் இறைச்சி பொருட்கள் மூலமும் பெறப்பட்டுள்ளது.
பிரதமரின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம், ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு பாரதம்) திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், புவிசார் குறியீடு பெற்றுள்ள உள்ளூர் மற்றும் இன விவசாய பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் அபேடா கவனம் செலுத்துகிறது. புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய ஏற்றுமதி இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப சோதனை ஏற்றுமதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கான கண்டுபிடிப்பு மற்றும் சந்தை இணைப்புகளை அபேடா உறுதிப்படுத்துகிறது.
மேலும், இந்த முயற்சிகளில் காகிதமில்லா அலுவலகம் (மறு-பொறியியல், டிஜிட்டல் கையொப்பம், மின்னணு கட்டணம் செலுத்தும் வசதி), மொபைல் ஆப், ஆன்லைன் சேவைகளை படிப்படியாக வழங்குதல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, சீரான அணுகல் மற்றும் மெய்நிகர் வர்த்தக கண்காட்சி ஆகியவை அடங்கும்.
இத்தகவல் சென்னை மண்டல அபேடா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


******
(रिलीज़ आईडी: 1798554)
आगंतुक पटल : 155