பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2022 3:39PM by PIB Chennai
நாட்டில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுக்க குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், குழந்தைக் கடத்தல் அதிகம் நடைபெறும் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அசாம், மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் திரிபுராவில் மாவட்ட அளவிலான ஒருநாள் பயிலரங்குகள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்கள் கொவிட்-19 பொதுமுடக்கத்துக்குப் பிறகு தேசிய அளவிலான ஆலோசனைகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதே போன்று குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் இந்த ஆணையம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 35 இணையவழிக் கூட்டங்களை நடத்தியிருப்பதுடன், அக்சய திருதியை தினத்தன்று குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796833
------
(வெளியீட்டு அடையாள எண்: 1796926)
வருகையாளர் எண்ணிக்கை : 212