மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

தமிழகத்தில் இருந்து 31 பேர் விண்ணப்பித்ததில் 10 பேர் தேர்வு

प्रविष्टि तिथि: 08 FEB 2022 5:38PM by PIB Chennai

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவி வருகிறது.

 இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்தில் பின்வரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

7.7 லட்சம் மெட்ரிக்டன் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் நிலையத்தின் மூலம் 2035  பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

24 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட  கால்நடை தீவன நிலையம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,477 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

4.35 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூலம் 795-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதி மத்திய அரசால் வழங்கப்படுவதால் மாநிலங்களுக்கென நிதி ஒதுக்கப்படுவதில்லை.

 இந்த நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளித்தவர்கள் பட்டியலில் தமிழ் நாட்டில் இருந்து 31 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 10 பேர் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபலா எழுத்து மூலம் அளித்த பதிலில்  இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

***************


(रिलीज़ आईडी: 1796593) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English