சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ESIC பயனாளிகளுக்கான வருடாந்திர நோய்த்தடுப்பு சுகாதார பரிசோதனை மற்றும் காணொளி வழி ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2022 6:35PM by PIB Chennai

ESIC மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & PGIMSR, K.K நகர், சென்னை - 600 078 இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நவீன வசதிகள் கொண்ட  மருத்துவமனையாகும். காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அதி சிறப்பு மருத்துவ சேவைகள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. சமீபத்தில் ESIC திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை முறை நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வருடாந்திர நோய் தடுப்பு சுகாதார பரிசோதனை (Annual Preventive Master Health Checkup) திட்டத்தை தொடங்கியுள்ளது. 40 வயது மற்றும்அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

 

இந்திய அரசின் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய தொலைத்தொடர்பு சேவைகளின் கீழ் - சஞ்சீவனி (காணொளி வழி ஆலோசனை) OPD சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. E - சஞ்சீவனி OPD சேவைகள் மூலம் உள்நுழைவதன் மூலம் ESIC பயனாளிகள் தங்கள் பணியிடத்தில் இருந்து தங்கள் வசதிக்காக ஆன்லைனில் பல்வேறு மருத்துவ ஆலோசனை சேவைகளைப் பெறலாம். காணொளி வழி சேவைகளை பயனாளிகள் -சஞ்சீவனி சேவைகள் மூலம் பல் மருத்துவம் ஆயுர்வேதம் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம். ESIC மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, K.K நகர், சென்னை அனைத்து ESIC பயனாளிகளும் வருடாந்திர நோய் தடுப்பு சுகாதார பரிசோதனை (முழு உடல் பரிசோதனை) சேவைகளையும் ஆரோக்கியமான மற்றும் தரமான வாழ்க்கைக்காக E-சஞ்சீவனி OPD சேவைகளையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறது.

-சஞ்சீவனி சேவைகளை https://esanjeevaniopd.in என்ற இணைப்பின் மூலம் அணுகலாம்.

பயனாளிகள் போர்ட்டலில் இருந்து பெறப்பட்ட OTP எண்ணை மொபைல் எண் மூலம் பயன்படுத்தி உள்நுழையலாம். நோய்த்தொற்றுக் காலங்களில் காணொளி வழி சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் பயனாளிகள் அனைவரும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

-------------


(வெளியீட்டு அடையாள எண்: 1795562) வருகையாளர் எண்ணிக்கை : 268
இந்த வெளியீட்டை படிக்க: English