சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நிதிநிலை அறிக்கை (2022-2023): சிறப்பம்சங்கள்-3

Posted On: 01 FEB 2022 12:59PM by PIB Chennai
  • ரூ. 44605 கோடி மத்திப்பிலான கென் - பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும்
  • திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
  • பொது போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத தூய்மையான போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகள் தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசை, தற்போது 12 ஆக இருக்கும் இந்த அலைவரிசைகள் 200-ஆக உயர்த்தப்படும்
  • துணைக் கல்வி வழங்கும் வகையில், பிராந்திய மொழியிலும் இந்த அலைவரிசைகள் மாணவர்களுக்கு வகுப்பு பாடங்களுக்கு இணையாக இவை போதிக்கும்
  • சிறு & நடுத்தர துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ. 50 ஆயிரம் அளவுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம்
  • திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் டிஜிட்டல் தேஷ மின்னணு வாயிலான இணையதளம் ஏற்படுத்தப்படும்
  • புதிய சட்டங்கள் மூலம் வாயிலாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும்
  • மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்
  • ஒப்பந்தங்கள் வாயிலாக கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்க பொது, தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்
  • நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்
  • நம்பிக்கையின் அடிப்படையிலான அரசை உறுதி செய்ய திட்டம்
  • 68 சதவீத பாதுகாப்பு மூலதன செலவின ஒதுக்கீடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்

 

  • முக்கிய துறைகளில் முன்னேற விரும்பும் 102 மாவட்டங்களில் கணிசமான முன்னேற்றம்
  • பெண்கள் சக்தி ஒளிமயமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது
  • கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்குமான குடிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ், 5.5 கோடி இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
  • பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வரும் நிதியாண்டில் கண்டறியப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் வழங்கப்படும்
  • நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் 280 கோடி ரூபாய் செலவில் திறன் மையங்கள் உருவாக்கப்படும்
  • குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஓரளவு இணைப்புகள் ஏற்படுத்தப்படும்
  • மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம்
  • குஜராத்தின் கிப்ட் சிட்டியில் சர்வதேச தீர்ப்பாயத்தை மத்தியஸ்த அமைப்பை உருவாக்க முடிவு


(Release ID: 1794134) Visitor Counter : 268