சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நிதிநிலை அறிக்கை (2022-2023): சிறப்பம்சங்கள்-4
Posted On:
01 FEB 2022 12:51PM by PIB Chennai
- மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை வளர்க்கவும் திட்டங்களை வடிவமைக்க சிறப்பு பணிக்குழு
- சுலபமான வாழ்க்கை & எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம் ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்
- பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி மின்னணு கரன்ஸி (மெய்நிகர் ரூபாய்) இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்கிறது
- வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு
- மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டம்
- பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க 10 நாட்களுக்குள் 75% பில்லை பணமாக்கும் முறை உருவாக்கப்படும். இதற்காக காகிதமற்ற மின்னணு பில்களை அமைச்சகங்கள் ஏற்படுத்தும்
- கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்கு பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்
- வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது
- காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டம்
- உயர்திறன் மிக்க பாலிசிலிக்கான் உற்பத்தி செய்ய உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 19500 கோடி ஒதுக்கீடு
- புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும்
- கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று முறை குறைந்த பட்ச வரி விகிதம் 18.5-லிருந்து 15 சதவீதமாக குறைப்பு
- நேரடி வரி விதிப்பில் கூடுதல் மாற்றங்கள்
- புதிய வருமான வரி படிவங்களை அடுத்த 2 மதிப்பீட்டு ஆண்டுக்கான படிவங்கள் சமர்ப்பிக்க அனுமதி
- அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 MMT கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்
- மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது
- மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிப்பு
- மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்
- நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது
- புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 68 % ஒதுக்கப்பட்டுள்ளது
(Release ID: 1794126)
Visitor Counter : 749