அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கர்நாடகாவைச் சேர்ந்த புதுமையாளர் அப்துல் காதர் நடக்கட்டின் பத்ம விருதிற்கு தேர்வு

Posted On: 27 JAN 2022 3:28PM by PIB Chennai

2022-ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 107 பேரில் கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த எளிய பின்னணி கொண்ட தொடர் புதுமையாளர் திரு அப்துல் காதர் நடக்கட்டினும் ஒருவர் ஆவார்.

 

புளி விதைகளை பிரிக்கும் சாதனம், உழவு கத்தி தயாரிக்கும் இயந்திரம், விதை மற்றும் உரத்  துளைப்பான், நீர் சூடாக்கும் கொதிகலன், தானியங்கி கரும்பு விதைப்புக்  கருவி மற்றும் சக்கர உழவு இயந்திரம் ஆகியவை அவரது முக்கியக்  கண்டுபிடிப்புகளில் அடங்கும்.

 

அவரது அனைத்து கண்டுபிடிப்புகளும் நிலைத்தன்மை மிக்கவை, செலவு குறைவானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மிக முக்கியமாக, சமூகத்தால் எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

 

விவசாய பருவநிலைகள் மற்றும் மண்ணின் பண்புகள் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவு, நாட்டின் மற்ற விவசாயிகள்  அவரை ஒரு முன்னுதாரண உந்து சக்தியாக ஏற்றுகொள்ளச் செய்துள்ளது..

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) ஆதரவு பெற்ற திரு அப்துல் காதர் நடக்கட்டினுக்கு 2015-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது அன்றைய குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது. நாட்டின் "வெறுங்கால் விஞ்ஞானி" என்றும் அவர் அறியப்படுகிறார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792941

                                ***************

 


(Release ID: 1792986) Visitor Counter : 231


Read this release in: English , Urdu , Bengali