இந்திய போட்டிகள் ஆணையம்

கிளாக்சோஸ்மித்கிலைன் ஆசியா நிறுவனத்தில் கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் ஓவர்சீஸ் நிறுவனம் மற்றும் கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் யுகே டிரேடிங் நிறுவனம் பங்குகளை வாங்க சிசிஐ ஒப்புதல்

Posted On: 24 JAN 2022 10:52AM by PIB Chennai

கிளாக்சோஸ்மித்கிலைன் ஆசியா நிறுவனத்தில் கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் ஓவர்சீஸ் நிறுவனம் மற்றும் கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் யுகே டிரேடிங் நிறுவனம் பங்குகளை வாங்க இந்தியப்  போட்டி ஆணையம் சிசிஐ போட்டிச்  சட்டம் 2002-ன் பிரிவு 31(1)-ன் கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கண்ட இரு நிறுவனங்களும், கிளாக்சோஸ்மித்கிலைன் ஆசியா நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளை வைத்திருக்க இது வகை செய்யும். இதற்கு முன்பாககிளாக்சோஸ்மித்கிலைன் ஆசியா நிறுவனம், இந்தியாவில் அயோடெக்ஸ் மற்றும் அஸ்டோகால்சியம் ஆகிய வணிக முத்திரைகளை  , சட்டபூர்வ, பொருளாதார, வணிகச்  சந்தை உரிமைகலுடன் வாங்கிப்  பயன்படுத்திக் கொள்ளும்.

இதுகுறித்த சிசிஐ-யின் விரிவான உத்தரவு வெளியிடப்படவுள்ளது.

 

மேலும் விரிவான விவரங்களுக்கு ஆங்கிலச்  செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792075

-----(Release ID: 1792150) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Hindi , Telugu