சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2022

Posted On: 18 JAN 2022 7:43PM by PIB Chennai

ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்ட தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2022 ஒட்டி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் தலைக்கவசத்துடன் கூடிய அஞ்சல்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசத்தைப் பயன்படுத்துங்கள்; விரைவான விநியோகத்திற்கு துரித அஞ்சலைப் பயன்படுத்துங்கள் என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. கொவிட் பரவல் காரணமாக பெரிய அளவில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. 

வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரும் நிலையில், இந்த அஞ்சல் பெட்டி பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று வேலூர் மண்டல அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் திரு பி கோமல் குமார்  தெரிவித்தார். 

சாலையில் செல்பவர்களிடம் இந்த அஞ்சல் பெட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என வேலூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

***********


(Release ID: 1790785) Visitor Counter : 594