மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கணினி பாதுகாப்பு இந்தியா திட்டத்தின் கீழ், 26-வது சிஐஎஸ்ஓ-களுக்கு முழுமையான புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு பயிற்சிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 17 JAN 2022 4:56PM by PIB Chennai

நாட்டில் கணினி பாதுகாப்பு  சூழலை வலுப்படுத்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய  இ-நிர்வாகப் பிரிவு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள்         (சிஐஎஸ்ஓ),  பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசும் தனியாரும் இணைந்த அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் அலுவலர்கள் ஆகியோருக்குப் புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு சார்ந்த ஆறு நாள் பயிற்சியை நடத்துகிறது.

இந்தப் பயிற்சித் திட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய கணினி பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் திருமதி  தூளிகா பாண்டே, பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும் ஒருவர் மற்றவரின் அனுபவத்திலிருந்து கற்றறிந்ததை வெளிப்படுத்துமாறும் தற்போதுள்ள பாதுகாப்பு முறைகளை  மேலும்  வலுப்படுத்துமாறும்  கேட்டுக்கொண்டார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கணினி சார்ந்த சட்டங்கள் பிரிவின்  குழு ஒருங்கிணப்பாளர் திரு ராகேஷ்  மகேஸ்வரி பேசுகையில், நாட்டில் கணினி பாதுகாப்பு அச்சுறுத்தல், அதிகரிப்பது பற்றியும், தனி நபர் தரவுகளின் முக்கியத்துவம் பற்றியும் பங்கேற்பாளர்களிடம் எடுத்துரைத்தார்.

“நாடாளுமன்றத்தில், விரைவில் சட்டமாகக்கூடும் என்ற நிலையில் உள்ள தரவுகள் பாதுகாப்பு மசோதா, எந்தவொரு தனிநபரின் சொந்தத் தரவுகள் பாதுகாப்பு, அவற்றை சேகரித்து வைக்கும் அமைப்பின் பொறுப்பாகும் என்று கூறுகிறது” என அவர் தெரிவித்தார். 

அண்மையில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கில் ஊடுருவல் நடந்தது பற்றி எடுத்துரைத்த அவர்,  “இவ்வாறு தவறுகள் நடக்கும் போது யார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்” என்றார்.

மூன்றாம் தரப்பு அமைப்புகளுக்கு பல பணிகள் தரப்படும் போது  அவற்றின் கட்டுப்பாடு எப்போதும் நம்மிடம் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

ஜனவரி 17 முதல் 22 வரை நடத்தப்படும் இந்தப் பயிற்சித்திட்டம் நெட்பின்னல் பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் தரவுகள் பாதுகாப்பு, செல்பேசி பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள கணினி  பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள், உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டதாக  இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790518

*****



(Release ID: 1790532) Visitor Counter : 171


Read this release in: Hindi , Marathi