சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடி-யின் சாரங்க் விழாவின் 27-ஆவது அமர்வு மெய்நிகர் வடிவில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
05 JAN 2022 3:21PM by PIB Chennai
சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார திருவிழாவான சாரங்கின் 27 ஆவது அமர்வு நாளை முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி மெய்நிகர் வடிவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஆண்டுதோறும் ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப விழாக்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மெய்நிகர் வடிவில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் அதே எழுச்சியுடன் சாரங்க் விழா நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் புதிய நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 35,000 பேர் மெய்நிகர் வடிவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் செவிவழி அறிவு மற்றும் மரபுகள் என்பதாக இருக்கும். 2022 சாரங்க் விழா மாணவர்களை கொண்டு சேர்ப்பதாக இருக்கும்.
நடிகர் துருவ் சேகல், வினய் ராய், கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை அதிதி அசோக், கர்நாடக இசைக் கலைஞர் எஸ் சவுமியா உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1787658)
வருகையாளர் எண்ணிக்கை : 182