சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் கோயம்புத்தூர் பீளமேடு உணவு கழக குடோனை பார்வையிட்டார்

Posted On: 02 JAN 2022 12:15PM by PIB Chennai

கோவை பீளமேட்டில் உள்ள இந்திய உணவுக்கழகத்துக்கு  ( எப்சிஐ) சொந்தமான குடோனை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு சுதன்சு பாண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தார். . அவருடன் FCI - தலைமை பொது மேலாளர் (தென் மண்டலம்), திரு.சஞ்சீவ் கௌதம், FCI - தலைமை மேலாளர் (தமிழ்நாடு) திரு. பி.என். சிங், கோவை மாவட்ட ஆட்சியர் Dr. சமீரன், , FCI, கோட்ட மேலாளர் (கோவை) திரு. N. ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது, திரு. பாண்டே ,பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற சமூக நலத் திட்டங்களின் கீழ் விநியோகம் செய்வதற்காக டிப்போவில் வழங்கப்படும் உணவு தானியங்களின் (அரிசி & கோதுமை) தரத்தை சரிபார்த்து, திருப்தி அடைந்தார். மேலும் சிறந்த முறையில் உணவு சேமிப்பு/ பாதுகாப்பு செய்ததற்காக FCI அதிகாரிகளைப் பாராட்டினார். மாவட்ட ஆட்சியரும்  FCI மூலம் மாநில அரசுக்கு விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் தரம் சிறந்த முறையில் இருப்பதை அங்கீகரித்தார்.

   இந்திய அரசாங்கத்தின் “தேசிய சொத்து பணமாக்குதல்” திட்டத்தின் கீழ் FCI இன் சொத்துக்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி, வலியுறுத்திய திரு பாண்டேபீளமேட்டில் உள்ள FCI குடோன் வளாகத்தில் SILO கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உத்தரவிட்டார். ஏற்கனவே ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடோனுக்கான அணுகு சாலையை 3 மாதங்களுக்குள் கட்டித்தர FCI அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அவர் உத்தரவிட்டார்.

 

    பின்னர், திரு.சுதன்சு பாண்டே மற்றும்  அதிகாரிகள் மற்றும் டி.என்.சி.எஸ்.சி மாநில அரசு அலுவலர்கள் சிந்தாமணி கூட்டுறவு நிறுவனத்திற்குச் சென்றனர். அங்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் தரம் சரிபார்க்கப்பட்டது. அந்த ரேஷன் கடையின் பயனாளிகளுடன் உரையாடிய அவர்,   பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

 

திரு.சுதன்சு பாண்டே , கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு FCI குடோன்(இடது) ரேஷன் கடை (வலது) பார்வையிட்டார். Dr. சமீரன் IAS (மாவட்ட ஆட்சியர், கோவை) மற்றும்  FCI மற்றும் மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

 

 

   உபயோகப்படுத்தப்படாத உண்ணத்தக்க உபரி உணவினை ஏழை மக்களுக்கு கிடைக்க செய்ய, “நோ ஃபுட் வேஸ்ட்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து உணவுத்துறை செயலாளரிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கூறினார். இந்த சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான ஒரு மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

   “ஒரே நாடு ஒரே அட்டை” திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு திரு.சுதன்ஷு பாண்டே அறிவுறுத்தினார். மேலும், ICDS/MDM-ன் கீழ் உள்ள பயனாளிகளுக்கு FCI குடோன்களில் வலுவூட்டப்பட்ட உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

 



(Release ID: 1786916) Visitor Counter : 283


Read this release in: English