அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கார்பன் அதிகமுள்ள நட்சத்திரங்கள் தங்களின் குறைந்த எடையுள்ள தோழமை நட்சத்திரங்களில் இருந்து கன ரக மூலக்கூறுகளைத் திருடுகின்றன.

Posted On: 31 DEC 2021 2:57PM by PIB Chennai

கார்பன் அதிகமுள்ள நட்சத்திரங்களில் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு அதிகமான இரும்பை விட கனமான மூலக்கூறுகளைப் பெற்றிருப்பது குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆச்சரியம் அடைந்திருந்தனர். இந்திய வானியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி இதற்கு தற்போது விடை கண்டுள்ளது. இந்த நட்சத்திரங்கள்   தங்களின் குறைந்த எடையுள்ள தோழமை நட்சத்திரங்களில் இருந்து கன ரக மூலக்கூறுகளைத்  திருடுகின்றன என்பதே அவர்களின் கண்டுபிடுப்பு.

 

பேரண்டத்தில் இரும்பைவிட கனமான மூலக்கூறுகளின் தோற்றமும் பரிணாமமும் தெளிவாக உணரப்படவே இல்லாமல் தான் இருந்தது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பெங்களுருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அருணா கோசுவாமி தலைமையிலான  குழு இந்தப் புதிருக்கு விடை கண்டுள்ளது.

 

"கார்பன் செறிவுள்ள உலோகம் குறைவான இந்த நட்சத்திரங்கள் பரிணாமத் தொடக்கத்தில் உலோகங்களை உற்பத்தி செய்யக் கூடியவை அல்ல என்ற நிலையில் அவற்றின் மேற்பரப்பில் சூரியனை விட 100 முதல் 1000 மடங்கு அதிக அளவில் கனரக உலோகங்கள் காணப்பட்டன: இதற்குச்  சாத்தியமான காரணங்கள் ஆராயப்பட்டபோது இந்த உலோகங்கள் இந்த நட்சத்திரங்களின் தோழமையான எடை குறைந்த நட்சத்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்டது தெளிவானது"  என்று பேராசிரியர் கோசுவாமி கூறுகிறார்.

 

தோழமை நட்சத்திரங்கள் தொடர்பான பகுப்பாய்வும் இதனை நிரூபித்துள்ளது என்று இக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பார்க்கவும் :

  1.  https://doi.org/10.3847/1538-4357/ac1ac9
  2.   https://doi.org/10.3847/1538-4357/ac1d4d

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786553

 

 

 

*****



(Release ID: 1786649) Visitor Counter : 150


Read this release in: English , Hindi