சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த இளநிலைப் பட்ட தேர்வு 2021
Posted On:
29 DEC 2021 3:45PM by PIB Chennai
பணியாளர் தேர்வாணையம் ‘ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை 23.12.2021 அன்று வெளியிட்டது.
பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் ssc.nic.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 23.01.2022. ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.01.2022.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தென் பிராந்தியத்தில் ஏப்ரல் மாதத்தில், ஆந்திராவை சேர்ந்த சிராலா, கடப்பா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், தெலங்கானாவை சேர்ந்த ஐதராபாத், கரீம்நகர், வாராங்கல், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 23 மையங்களில் தேர்வு நடைபெறும் என்று பணியாளர், தேர்வாணையத்தின் இணைச் செயலர் மற்றும் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1786060)
Visitor Counter : 233