விவசாயத்துறை அமைச்சகம்
“வாசனைத் திரவிய புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021” என்ற நூலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
22 DEC 2021 3:48PM by PIB Chennai
“வாசனைத் திரவிய புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021” என்ற நூலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் 21 டிசம்பர் 2021 அன்று வெளியிட்டார். இந்த நூலில் வாசனைத் திரவியங்கள் சாகுபடி செய்யப்படும் இடம், அவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விலை மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வாசனைத் திரவியங்களின் மதிப்பு பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாக்கு மற்றும் வாசனைத் திரவிய வளர்ச்சித்துறை இயக்ககம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. 2014-15 முதல் 2020-21 வரையிலான கடந்த 7 ஆண்டு காலத்தில் நாட்டில் வாசனைத் திரவியத் துறையின் வளர்ச்சிப் பற்றிய முக்கிய அம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
நாட்டில், 2014-15-ல் 67.64 லட்சம் டன்னாக இருந்த வாசனைத் திரவியப் பொருட்கள் உற்பத்தி 2020-21-ல் 106.79 லட்சம் டன்னாகவும், சாகுபடி பரப்பளவு 32.24 லட்சம் ஹெக்டேரிலிருந்து 45.28 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது. சீரகம், பூண்டு, இஞ்சி, சோம்பு, வெந்தயம், மல்லி, மிளகாய் மற்றும் மஞ்சள் ஆகிய முக்கிய வாசனைத் திரவியங்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போன்று வாசனைத் திரவிய ஏற்றுமதியும் ரூ.14,900 கோடியிலிருந்து ரூ.29,535 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******
(रिलीज़ आईडी: 1784230)
आगंतुक पटल : 333