ஜல்சக்தி அமைச்சகம்
ஆறுகளில் கழிவுகளை விடுதல்: தமிழக தொழில் நிறுவனங்களின் விவரம்.
Posted On:
16 DEC 2021 4:59PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிஷ்வேஸ்வர் துடு கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மாநகரங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்படாத மற்றும் ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஆறுகளில் கலப்பதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆறுகள் பெருமளவு மாசுபடுகின்றன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளபடி, பல்வேறு நீர்நிலைகளில் அவற்றின் கழிவுகளை வெளியேற்றும் 2836 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் நாட்டில் உள்ளன.
இவற்றில் 2180 தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், 656 தொழிற்சாலைகள் சுயமாக மூடப்பட்டுள்ளன. விதிகளுக்கு இணங்கும் மற்றும் இணங்காத நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே 2053 மற்றும் 127 ஆகும். இணங்காத நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பொறுத்தவரை, 52 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 56-க்கு மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2-க்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள மொத்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2836 ஆகவும், சுயமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 656 ஆகவும், செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2180 ஆகவும், சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2053 ஆகவும், சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்காத தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 127 ஆகவும் உள்ளது.
52 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 56 நிறுவனங்களுக்கு மூடல் உத்தரவு வழங்கப்பட்டு, 2 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, 17 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இத்தகைய நிறுவனங்கள் எதுவும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782295
*************
(Release ID: 1782452)
Visitor Counter : 164