ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கம்: தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் செலவிடப்பட்டுள்ள தொகை.
प्रविष्टि तिथि:
16 DEC 2021 3:23PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளையும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லா இடங்களாக மாற்றுவதற்காக 2014 அக்டோபர் 2 அன்று மத்திய அரசு திட்டமான தூய்மை இந்தியா (கிராமப்புறம்) தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தகவல் மேலாண்மை அமைப்பில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10.8 கோடிக்கும் அதிகமான தனிநபர் வீட்டு கழிப்பறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன.
திட்டத்தின் இலக்கு எட்டப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2020 அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) கட்டம் இரண்டின் கீழ், மொத்த திட்ட நிதியில் 5% வரை தகவல், கல்வி, தகவல் தொடர்புக்கு செலவிடலாம்.
2014-15 முதல் 2021-22 வரை நாடு முழுவதும் இதற்காக ரூ 1894.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ 120.63 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782210
************
(रिलीज़ आईडी: 1782427)
आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English