பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்து குறைபாடு இல்லா இந்தியாவை உருவாக்க நடவடிக்கை: தமிழகத்தில் 22 சதவீத குழந்தைகளும், 12.6 சதவீத பெண்களும் இயல்பான எடையை விட குறைவு.

Posted On: 15 DEC 2021 2:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி  இராணி இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, ஊட்டச்சத்து குறைபாடுடன் கூடிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களின் விவரம்  மாநில வாரியாக கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களிடம் ஊட்டசத்து குறைபாடு தற்போது குறைந்துள்ளது. 2019-21ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தமிழகத்தில் 22 சதவீத குழந்தைகளும்,  12.6 சதவீத பெண்கள் இயல்பான எடையை விட குறைவாக உள்ளனர்.

கடந்த 2 நிதியாண்டுகளில் ஊட்டசத்து திட்டத்துக்கு ரூ.4 ஆயிரத்து 668 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்துக்கு (ஐசிடிஎஸ்) ரூ.26 ஆயிரம் கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781673

                                                                                                **************

 

 


(Release ID: 1781982) Visitor Counter : 363


Read this release in: English