அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான சூரிய புயல்கள், விஞ்ஞானிகளை குழப்பம் அடைய செய்துள்ளன.

Posted On: 15 DEC 2021 3:13PM by PIB Chennai

வானில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் அவ்வப்போது, வெடிப்பு ஏற்பட்டு சூரிய புயலாக வெளிப்படும். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏற்பட்ட சூரிய புயல்களை விட, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஏற்பட்ட சூரிய புயல்கள் மிக சிறிய அளவில் நடந்துள்ளன. சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றலின் சுற்றளவும், கடந்த தசாப்தத்தில் 3ல் இரண்டு பங்கு அளவுக்கே இருந்தன.  சூரிய புயல் நிகழ்வுகளின் நிறை, அளவு மற்றும் உள் அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சூரியனின் மையப் பகுதியில் ஏற்படும் வெடிப்பின் சராசரி சுற்றளவும் குறைந்துள்ளது.

சூரியனின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்வது முக்கியமானது. ஏனென்றால், இவை பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.  புவியின் சுற்றுப் பாதையில் உள்ள செயற்கை கோள்கள், ஜிபிஎஸ் சிக்னல்கள், தொலை தூர ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் மின் தொகுப்புகளிலும்  பாதிப்பு ஏற்படுகிறது. சூரிய செயல்பாட்டின் தீவிரம் கடந்த 11 ஆண்டுகளில் குறைந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் 2019ம் ஆண்டில், சூரியனின் செயல்பாடும் தீவிரமற்ற நிலையில் இருந்தது. சூரியனின் இந்த செயல்பாடு, விஞ்ஞானிகளை குழப்பம் அடையச் செய்துள்ளது.

சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் கழகத்தின்(ஐஐஏ) டாக்டர் வகீஷ் மிஸ்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  

இது குறித்த ஆய்வு முடிவுகள் ‘Frontiers in Astronomy’ மற்றும் ‘Space Sciences’ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணவும்: 

https://www.frontiersin.org/articles/10.3389/fspas.2021.713999/full

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781703

                                                                            ****************

 

 



(Release ID: 1781928) Visitor Counter : 116


Read this release in: English , Hindi