சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலவரம்
Posted On:
15 DEC 2021 1:27PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2014 ஏப்ரல் முதல் இன்று வரை நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 91,287 கிலோமீட்டரில் இருந்து சுமார் 1,40,937 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானத் தரம் மற்றும் பணி முன்னேற்றத்தை கண்காணிக்கவும் சரிபார்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படுகின்றன. அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் காங்கிரஸ் விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களின்படி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டுள்ளன.
தரம் குறைந்த பணிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை திருத்தப்பட்டு விவரக்குறிப்புகளின்படி மீண்டும் அமைக்கப்படுகின்றன. ஒப்பந்தம்/சலுகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தர உத்தரவாதம்/கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதற்கான தினசரி மேற்பார்வைக்காக ஆணையத்தின் பொறியாளர்/சுயாதீனப் பொறியாளராக ஆலோசகர்களை நியமிப்பதன் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், தொடர்புடைய நிறுவனங்கள் மீது ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
2014-15 முதல் 2021-22 நிதியாண்டின் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில், சுமார் 82,058 கிமீ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சுமார் 68,068 கிமீ நீள சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அமைச்சகம் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781649
*******
(Release ID: 1781906)