இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2021 3:57PM by PIB Chennai
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணித்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் குரூப் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
குன்னூர், ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

********